• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பொலிஸ் சிஐடி எனக் கூறி 30 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

Jan. 17, 2025

யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யார் கஸ்தூரியர் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றுக்கு சென்ற மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கடையை சோதனையிட வந்துள்ளதாக சிங்கள மொழியில் கூறினர்.அதே குழுவில் வந்த ஒருவர் அதனை கொச்சத் தமிழில் கூறிய நிலையில் தம்மிடம் இருந்த போலி பொலிஸ் அடையாள அடையாள அட்டைகளை காண்பித்து கடையை சோதனை இடுவதற்காக மூடுமாறு கூறியுள்ளனர்.

கடையை மூட மறுத்துள்ள நிலையில் தாமாகவே கடையை மூடி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை விட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் நகைக்கடையில் காணப்பட்ட சிசிடிவி காணொளிகளையும் அழித்துச் சென்றுள்ளதாக அயலில் உள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed