வரும் மாதங்களில் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் அமெரிக்காவின் ஊழியர்கள் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பார்க்கிறது என்றே பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிவிவகாரத்துறை ஆராய்ந்து வருகிறது.
அதில், மனித உரிமைகள், அகதிகள், உலகளாவிய குற்றவியல் நீதி, பெண்கள் பிரச்சினைகள் மற்றும் மனித கடத்தலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது கோடீஸ்வர உதவியாளர் எலோன் மஸ்க் ஆகியோர் இணைந்து செலவுக் குறைப்பு முயற்சியை முன்னெடுப்பதால், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க மற்றும் உள்ளூர் ஊழியர்களை குறைந்தது 10% என குறைப்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.