• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்

Mai 1, 2025

கொழும்பு – கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!

உயிரிழந்த மாணவி தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடிக்கு சென்று மேசை ஒன்றில் ஏறி நின்று கீழே குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பாடசாலை மாணவி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் உயிரிழப்புக்கான் காரணம் வெளியாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; பரிதாப மரணம் | Schoolgirl Dies Jumping Colombo Apartment Building
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed