சித்திரை மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது அதிசக்தி வாய்ந்த பலனை நமக்கு கொடுக்கும்.
இன்று 2-5-2025 வெள்ளிக்கிழமை மாலை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு செய்து எப்படி. மற்ற நாட்களில் வாராகி வழிபாடு செய்யாதவர்கள் கூட, இன்று வெள்ளிக்கிழமை மாலை பூஜையறையில் எப்போதும் போல விளக்கு ஏற்றி, வெள்ளிக்கிழமை பூஜை செய்து வாராகி வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டிற்கு பூஜை அறையில் கட்டாயம் வாராகி திருவுருவப்படம் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் வாராகி தாயை ஆவாகனம் செய்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்து, இந்த மந்திரத்தை சொல்லி விடுங்கள்.
வீட்டில் தலை விரித்து ஆடும், பஞ்சம், வறுமை, கஷ்டம், கண் திருஷ்டி அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் வெளியேற, இதைவிட எளிமையான பரிகாரத்தை யாரும் உங்களுக்கு சொல்லவும் முடியாது.
இப்படி ஒரு நாள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கவும் கிடைக்காது. இன்று 2-5-2025 வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல வீட்டில் விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை பூஜை செய்யுங்கள். அந்த பூஜையில் ஒரு சின்ன பாத்திரத்தில், ஒரு கொத்து வேப்ப இலை போட்டு, தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு, தீர்த்தம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தீர்த்தத்தின் மேலே உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, “வஜ்ரகோஷம்” என்ற வார்த்தையை மட்டும் 108 முறை, வாராகி அம்மனை நினைத்து சொல்லுங்கள்.
தீர்த்தம் உள்ள பாத்திரத்தின் மீது உங்கள் உள்ளங்கையை வைத்து, இந்த மந்திரத்தை சொல்லும் போது, வாராகியின் மொத்த சக்தியும் அந்த தீர்த்தத்தில் இறங்கி விடும். பிறகு வெள்ளிக்கிழமை பூஜையை கற்பூர ஆரத்தி காண்பித்து நிறைவு செய்துவிட்டு, இந்த தீர்த்தத்தை “வஜ்ரகோஷம்” என்ற வார்த்தையே சொல்லி, வீடு முழுவதும் தெளித்து விட, உங்கள் வீடு முழுவதும் வாராகித்தாய் நிறைந்து காணப்படுவாள்.
வஜ்ரகோஷம் சொல்லி, இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்துவிட்டால், வீட்டில் இருக்கும் வறுமை கண் திருஷ்டி, வீட்டில் தங்கியிருக்கும் கெட்ட சக்தி, அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் தெரித்து ஓடி விடும்.
பிறகு வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலையாக தங்கி இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள். வாராகியின் பிள்ளைகள் இவர்கள்.
உங்களுக்கு வாராகி பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. இது ஒரு எளிமையான பரிகாரம். அதுவும் இந்த வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இதை செய்வது வீட்டிற்கு அத்தனை சுபிட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கை இருந்தால் இதை நீங்களும் பின்பற்றி பலன் பெறலாம்.
- அமெரிக்காவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
- வட இந்தியாவில் கன மழை – எழுவர் பலி!
- ஐரோப்பாவில் டிக்டொக் செயலிக்கு அபராதம் விதிப்பு
- அகதிகளை மீளவும் ஏற்றுக் கொள்ள சுவிஸ் அரசாங்கம் முடிவு
- டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்