• Mi.. Mai 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கையில் காசு சேர்ந்து கொண்டே இருக்க காலை எழுந்ததும் இதை செய்யுங்கள்

Mai 27, 2025

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் செயல்கள் தான் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். கையில் தாளாளமாக பணம் புலங்குவதற்கும், பணம் உங்களை தேடி வந்து கொண்டே இருப்பதற்கும் காலையில் எழுந்ததும் இரண்டு பொருட்களை மட்டும் முதலில் தொட்டால் போதும்.

அந்த இரண்டு பொருட்கள் என்பதை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்டத்தை ஈர்க்க காலையில் செய்ய வேண்டியது

தண்ணீர்

காலை எழுந்ததும் முதலில் தண்ணீரை கையில் தொட வேண்டும். இது பெருக்கத்தை குறிக்கும் ஒரு பொருளாகும். தண்ணீரை தொட்டு, கைகளை கழுவியோ அல்லது முகத்தை கழுவிய பிறகு தான் மற்ற பொருட்களை கழுவ வேண்டும். சிலருக்கு காலையில் எழுந்தது வேறு ஏதாவது வேலைகளை செய்யும் பழக்கம் இருக்கும்.

குறிப்பாக பெண்கள் காலையில் இருந்ததும் சமையல் அறைக்கு சென்று வேலையை சற்று, துவக்கி விட்டு தான் முகம் கருவ செல்வார்கள். இப்படி செய்யக் கூடாது.

உப்பு

​பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு காலையில் எழுந்ததும் தொட வேண்டிய மற்றொரு பொருள் உப்பு. இது மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கள பொருட்களில் ஒன்று. அதனால் காலையில் எழுந்ததும் உப்பினை தொட்டு, மகாலட்சுமியிடம் நம்முடைய ஏதாவது குறை தீர வேண்டும் என தினமும் வேண்டினால் விரைவில் அது நடக்கும்.

உப்பு கடலில் இருந்து தோன்றுவதால் அதுவும் பெருக்கத்திற்குரிய பொருளாக கருதப்படுகிறது. அதனால் தான் அனைத்து விசேஷங்களிலும் உப்பினை முதலில் வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளது.

தொடக் கூடாத 2 பொருட்கள்  

அரிசி

காலையில் எழுந்ததும் தொடக் கூடாத பொருட்களில் முக்கியமானது அரிசி. இது மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக இருந்தாலும், ஈர்ப்பு தன்மை அதிகம் கொண்டதாகும். இதனால் உங்கள் கையில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை முழுவதுமாக ஈர்த்து விடும். அதனால் எழுந்ததும் அரிசியை தொட்டால் கையில் இருக்கும் காசை ஈர்த்து, இழுத்து விடும். மறந்தும் கூட காலையில் எழுந்ததும் நேரடியாக சமையலுக்கு அரிசி எடுக்கிறேன் என அரிசியை தொட்டு விடாதீர்கள்.

தொடக் கூடாத மற்றொரு பொருள் புளி. இது மங்கள பொருள் என்றாலும் எளிதில் கரையும் தன்மை கொண்டது என்பதால் கையில் இருக்கும் காசையும் சீக்கிரம் கரைய வைத்து விடும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed