இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை திங்கட்கிழமை (02) மேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமானசேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணம் தொடங்கியுள்ளது