யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்திருந்தார்.
அத்துடன், அண்மைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் „ஹீட் ஸ்ரோக்“ ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி .பேரானந்தராஜா ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- 2ஆம் ஆண்டு நினைவு. அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2025, சிறுப்பிட்டி மேற்கு)
- இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
- விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
- மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்