ஆர்கோ கன்டோனில் Spreitenbach இல் 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார் என்று ஆர்கோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும், பெரியளவில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில், நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த தீவிபத்தில் 19 பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் கூறிய போதும், பின்னர் அந்த எண்ணிக்கை 14 என உறுதி செய்துள்ளனர்.
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!