நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பிறகு சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன அரண்மனை 4 படத்திலும் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி இருப்பார். அவரது கணவர் சுந்தர்.சி இயக்கிய படம் தான் அது.
ரஜினியின் அண்ணாத்தே படத்தின் ஏண்டா நடித்தோம் என எனக்கு இருந்தது என சமீபத்திய ஒரு பேட்டியில் குஷ்பு கூறி இருக்கிறார்.
அந்த படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடி யாரும் இல்லை, அதற்கு பிறகு தான் இயக்குனர் ஒரு டாப் ஹீரோயினை கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு ஜோடியே இல்லை. அதனால் கதையை கேட்டு எனது ரோலுக்கும், மீனா ரோலுக்கும் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என நம்பி நடித்தோம்.
ஆனால் அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது என குஷ்பு கூறி இருக்கிறார்.

- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்