மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (2024.07.21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
தீவின் மற்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்வதோடு காற்றின் வேகமானது 30 முதல் 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்
- பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்
- யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
- யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது
- எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!