• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஒமிக்ரோன் தொடர்பாக வெளியான புதிய தகவல்.

Jan 27, 2022

ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், அது பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.

ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒமிக்ரோன் பற்றி ஒரு ஆய்வு நடத்தியதில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , உருமாறிய கொரோனா வைரஸ்கள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை தொடர்பு பரிமாற்றத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் அவற்றின் பரவலுக்கு பங்கு அளிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, ஆல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும் என கூறாப்படும் அதேவேளை , ஒமிக்ரோன் 191.3 மணி நேரம் வாழும்.

மேலும் ஒமிக்ரோன் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிர்வாழ்கிறபோது, ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர்வாழும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed