யாழ்ப்பாணம்-கட்டபிராய் பகுதியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணின் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – கட்டபிராய் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகைளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!