• Mi.. Mai 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திங்கட்கிழமை அமாவாசை பரிகாரம்

Mai 26, 2025

26-5-2025 திங்கட்கிழமையோடு சேர்ந்து அமாவாசை தினம் வந்திருக்கிறது. இது ஒரு சக்தி வாய்ந்த அமாவாசை என்று சொல்லலாம்.

மற்ற கிழமைகளில் அமாவாசை திதி வருவதை காட்டிலும், இந்த திங்கட்கிழமை அன்று அமாவாசை திதி வந்தால், அந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று அமாவாசைகள் மட்டுமே இப்படி, திங்கட்கிழமையுடன் சேர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமையோடு சேர்ந்து அமாவாசை தினம் வந்தால், அந்த நாளில் ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தத்தில் குளித்து, நம்முடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யும்போது, நம்முடைய கர்ம வினைகள் குறைந்து, பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமா? எல்லோராலும் இந்த அமாவாசை திதியில் ராமேஸ்வரம் சென்று திதி தர்ப்பணம் கொடுக்க முடியுமா. நிச்சயம் முடியாது. சாஸ்திரத்தில் இதற்கு பதில் இன்னொரு ஒரு பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. அந்த சுலபமான பரிகாரம் என்ன. திங்கட்கிழமையோடு சேர்ந்து வரும் அமாவாசை நாளில் அரச மரத்தை, பிரம்ம முகூர்த்த நேரத்தில் 108 முறை வலம் வர வேண்டும்.

அதாவது அமாவாசை நாளில் சூரிய உதயத்திற்கு முன்பு அரச மரத்தை நீங்கள் 108 முறை சுற்றி முடித்து இருக்க வேண்டும். அந்த 108 சுற்றில் ஒருமுறை அல்லது மூன்று முறை அடி பிரதக்ஷணம் செய்து, அரச மரத்தை வளம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்த பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய உதயத்திற்கு முன்பு, ஒரு அரச மரத்தை 108 முறை நீங்கள் சுற்றி விட்டால் போதும். அந்த முன்னோர்களின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அறிந்தோ அறியாமலோ முன்னோர்களுக்கு பாவம் செய்திருந்தால், அவர்களுக்கு திதி தர்ப்பணம் காரியங்களை சரியாக செய்யாமல் விட்டிருந்தாலோ, அதற்கான மன்னிப்பும் இந்த நாளில் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இந்த வழிபாடு உங்கள் குடும்பத்திற்கு மட்டும் புண்ணியத்தை சேர்க்காது. உங்கள் வம்சாவழியினருக்கே புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும் என்பதை மறந்து விடாதீங்க. நாளைய தினம் இந்த பரிகாரத்தை யாரும் செய்ய தவற வேண்டாம். இந்த பரிகாரத்தை அனைவரும் செய்வதற்கு உண்டான பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம். இந்த அரச மரத்தை சுற்றி வரும் போது உச்சரிக்க வேண்டிய ஒரு மந்திரம் உள்ளது.

அரச மரத்தை சுற்றும் போது 3 முறை, 27 முறை, அல்லது 108 முறை இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. நாளை வரவிருக்கும் அமாவாசை திதியில் அதி அற்புதம் வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் இருக்கும் பெரிய துன்பங்கள் எல்லாம் கூடிய விரைவில் நீங்கிவிடும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed