• Mi.. Mai 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பணமோசடி செய்த குடும்பபெண் கைது

Mai 26, 2025

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில்  கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்.

அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம் 2024ம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன்  செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை(26)கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதேவேளை தன்னுடைய பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த குறித்த பெண்ணிடம் இருந்து தனக்குரிய பணத்தை மீள பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed