• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையை அண்மித்த காற்றுச் சுழற்சி.

Feb 22, 2022

இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் நாளை முதல் சில நாட்களுக்கு மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் கிழக்காக, வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்றுச் சுழற்சியானது இலங்கையை நெருங்கி வருவதன் காரணத்தினால் நாளை முதல் (23) மற்றும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் ஓரளவு மழை சில நாட்களுக்கு பெய்யும் சாத்தியம் உள்ளது.

அதுமட்டுமல்லாது தற்போதும் தென்சீனக் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி அல்லது 24ஆம் திகதியளவில் அந்தமான் கடல் பிராந்தியத்தை அண்மித்து, சற்று தீவிரமடைந்து, எதிர்வரும் 28ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கும் சாத்தியம் உள்ளது.

இது சற்று தீவிரமடைந்து நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் (Well Marked Low Pressure Area) தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed