• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இத்தாலியை ஒரே நாளில் மூழ்கடித்த கனமழை! 9 பேர் பலி

Sep. 16, 2022

இத்தாலியின் மத்திய பகுதியில் ஒரே நாளில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பங்கு மழை, ஒரே நாள் இரவில் முழுவதுமாக கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச்சே பகுதியில் நேற்று இரவு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக Serra Sant’Abbondio பகுதி மேயர் கருத்து தெரிவிக்கையில், இந்த கனமழை நிலநடுக்கம் போன்று இருந்தது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், காணாமல் போன நான்கு பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மார்ச்சின் பிராந்திய அரசாங்கத்தின் சிவில் பாதுகாப்பு தலைவர் ஸ்டெபானோ அகுஸ்ஸி, எங்களுக்கு சாதாரண மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

ஆனால் முன்னறிவிக்கப்பட்டதை விட மழை மிகவும் வலுவாக இருந்தது, இதுபோன்ற எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed