• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி !

Sep 28, 2022

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை (29) மதியம்
12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை
அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடையவுள்ளதுடன்
மாவட்ட செயலரிடம் மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed