• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலைகள் தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை

Okt. 20, 2022

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed