• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய்

Okt 21, 2022

கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி கொட்டும் பிரச்சனை நீங்கி முடியை நன்றாக பராமரிக்கலாம். பல  காரணங்களால் தலைமுடி கொட்டுகிறது.

தலைமுடி உதிர்வுக்கு சத்துக்குறைபாடு, சரியான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருப்பது, அழுக்கு சேர்ந்து அதனால் ஏற்படும் பிசுபிசுப்பு, பொடுகு, டென்ஷன் போன்றவையும் முக்கிய காரணங்களாக அமைகிறது.

இந்த கருஞ்சீரக எண்ணெய்யை நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் முடி உதிர்வு கட்டுப்படும். இந்த இளஞ்சூடாக தலையில் தேய்த்து நன்கு ஊறவைத்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கலாம்.தேங்காய் எண்ணெய், தேன் இவற்றை கலந்து கொண்டு இதனை கருஞ்சீரக எண்ணெய்யோடு கலந்து உள்ளங்கையில் ஊற்றி, இரு கைகளையும் நன்கு தடவ வேண்டும். பின் கையில் உள்ள அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது கருஞ்சீரக எண்ணெய்யை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்து, பின் லேசாக சூடான நீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் வைத்து பின்னர் தலைமுடியை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம்.இவ்வாறு பயன்படுத்தும்போது முடியின் வறட்சி நீக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நன்கு நீண்டு வளர செய்கிறது. மேலும் முடி உதிர்வது நிற்பதோடு, நரைமுடி வராமல் பாதுகாக்கும்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed