• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தொற்று-

Dez 16, 2022

பிரித்தானியாவில் strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து strep A பாதிப்புக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை இதுவெனவும் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி, பிரித்தானியாவில் strep A பாதிப்பானது உச்சம் பெற்றுவருவதை அதிகாரிகள் தரப்பு இன்னமும் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், எதிர்வரும் நாட்களில் அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகலாம் எனவும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

strep A பாதிப்பானது மிக லேசான அறிகுறிகளுடன் காணப்படுவதால் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. மேலும், அதன் தாக்கம் தீவிரமடைந்த பின்னர் மருத்துவர்களை நாடும் நிலையும் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.strep A பாதிப்பானது தற்போது அதிகரிப்பதன் காரணம் கண்டறியப்படவில்லை. மக்கள் நடமாட்டம் தற்போது அதிகமிருப்பதால், தொற்று பரவும் வாய்ப்பும் அதிகம் என கூறுகின்றனர்.

ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் தொண்டை அழற்சியால் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஆன்டிபயாடிக் மூலம் எளிதாக சிகிச்சையளிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டை வலி, முழுங்குவதில் சிரமம், தலைவலி, காய்ச்சல் என அறிகுறிகள் காணப்பட்டால், கட்டாயம் மருத்துவர்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed