• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.அச்சுவேலி நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

März 5, 2023

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழுஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில்மற்றைய குழுவை சேர்ந்த ரவுடிகள் அவனை துரத்தி.. துரத்தி.. வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு இலக்காகிபடுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாகஅச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed