யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 15 வயது சிறுவன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து…
வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு?
வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர். மேலதிக விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 35 பவுன்…
வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கை
வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு „எச்சரிக்கை“ மட்டத்தில் இருக்கக்கூடும் என்று…
அதிகாலை துப்பாக்கிச் சூடு – 19 வயது இளைஞன் பலி
கல்கிசைபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (5) அதிகாலை கல்கிசை – கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிந்த 19 வயதுடைய இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்…
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…
யாழ் வடமராட்சியில் இளம் தாய் ஒருவர் கடற்கரையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய தும்பளை கிழக்கை சேர்ந்தவரே கடலில் மூழ்கிய…
நாட்டில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை…
கிளிநொச்சி நாகபடுவான் குளத்தில் மூழ்கி 14 வயது மாணவன் பலி!
கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (03.05.2025) இடம்பெற்றுள்ளது. ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக் கொண்ட மலர்வண்ணன் விதுசன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.. தற்போது, உயிரிழந்த மாணவனின் சடலம், கிளிநொச்சி…
தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
காலியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் சற்றுமுன்னர் காலி -மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார்…
நாளை அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், மே 4 நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது. இந்த 25 நாள்கள் பொதுவாக கடுமையான வெப்ப நாள்களாகக் குறிக்கப்படுகின்றன, இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து…
மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து; பலர் படுகாயம்
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக…