யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகூடிய மழை வீழ்ச்சி இந்த ஆண்டு பதிவாகியுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 963 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது என்று அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை, நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.

மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக பெற்றோர் சிறுவர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Von Admin