• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி வடிவமா? விஞ்ஞானிகள்

Jan 17, 2022

ஒமிக்ரான் வைரஸ் தான் கொரோனா வைரஸின் கடைசி வடிவமா என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர் .

உலகெங்கும் கொரோனா வைரஸ் பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி வருகிறது என்றும், கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என பல மாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியபோது இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு விதங்களில் உருமாறி பரவுகிறது என்றும் ஒமிக்ரான் தான் கடைசி உருமாற்றம் என்று உறுதியாக கூற முடியாது என்றும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஒரு புதிய ஒரு உருமாற்றத்துடன் புதிய வகை வைரஸ் உலகை ஆட்டிப் படைக்கலாம் என்றும் கூறியுள்ளனர்இருப்பினும் உருமாறிக் கொண்டே இருக்கும் வைரஸ்கள் அதன் வீரியத்தை இழக்கும் என்றும் ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் முடிவுக்கு வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளது சற்று ஆறுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed