யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று (18) காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இத் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் குழாய் வழி மூலமாக  வைத்தியசாலை விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
சிறீபவானந்தராஜா தெரிவித்தார்.