கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புதுமை சேர்க்கும் முயற்சியில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய சுவை, புதிய தோற்றம் என Coca-Cola குளிர்பானங்களில் மாற்றங்கள் இம்மாதம் வெளிடப்படும் என நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சுவைக்கு ஏற்றவிதமாகக் குளிர்பான டின்னில் நிறுவனத்தின் பெயரின் நிறமும் அமையும் என கொக்ககோலா நிறுவவனம் அறிவித்துள்ளது.

Zero Sugar — கருப்பு நிறத்தில்,  Vanilla Coke — ஒரு வித மங்கிய வெள்ளை நிறத்தில்,  Cherry Vanilla — இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.

அதன் புதிய சுவைகள் செர்ரி, வெனிலா என்று இரு வேறு சுவைகளைக் கலந்த Coke Cherry Vanilla , காப்பி Coke என்று காப்பிச் சுவையிடன் கலந்த இனிப்புப் பானம் , Mocha என்று காப்பி, சாக்லெட் கலந்த இனிப்புப் பானம் மற்ற பழைய விதமான கோலா குளிர்பானங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டி, சுவையைச் சற்று மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமது புதிய மாற்றங்களை மக்கள் வரவேற்றுக் கூடுதலானோர் கொக்ககோலா இனிப்புப் பானங்களை அவர் விரும்பி வாங்குவர் எனவும் நிறுவனம் நம்பின்னை வெளியிட்டுள்ளது.

Von Admin