யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (01-02-2022) சங்கரத்தை துணைவி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியின் கால் எலும்பு பாரிய அளவில் முறிந்ததுடன் உடலின் வேறு பகுதிகளும் பலத்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த சிறுமி நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் இன்றைய தினம் (02-02-2022) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் வட்டுக்கோட்டை பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

Von Admin