• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் பெண்களின் திருமண வயதில் மாற்றம்?

Feb 2, 2022

பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில்,  பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதை 21 அல்லது 25 ஆக மாற்றியமைக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் அமைப்பொன்றினால் இந்த யோசனை, “ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

முஸ்லிம் பெண்கள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, வைத்தியர்  மரினா ரிஃபாய் மற்றும் ஊடகவியலாளர் சுபா காசிம் உள்ளிட்ட குழுவினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, காதி நீதிமன்ற முறைமை குறித்தும் சில விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக தகுதியில்லாதவர்கள் காதி நீதிமன்றத்திற்கு நியமிக்கின்றமை பிரச்சினைக்குரியது என அவர்கள் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.

அத்துடன், பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் ஆகக்குறைந்த வயது 21ஆக திருத்தியமைக்கப்பட வேண்டும் என வைத்தியர் மரீனா ரிஃபாய் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களின் திருமண வயது 25ஆக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என  ஊடகவியலாளர் சுபா காசிம் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed