• Di. Apr 23rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்? தென் கொரியாவில் அறிமுகம்.

Feb 4, 2022

தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், தடுப்பூசியும்தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களிடம் மாஸ்க் அணியும் பழக்கமும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி.

மாஸ்க்கு பதில் கோஸ்க்..

தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம் புதிய விதமான முகக் கவசத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முகக் கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டியதில்லை.

மூக்கின் வழியாகவே கரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது இந்த கோஸ்க் இது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தென் கொரியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா தீவிரமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை 22,907 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா கரோனாவை இன்றுவரை சிறப்பாகவே கையாண்டுள்ளது. இதுவரை கரோனாவுக்கு தென்கொரியாவில் 6,812 பேர்வரை பலியாகி உள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed