• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை – தாய்லாந்து இடையே விசா இன்றி பயணம் உறுதி..

Nov. 23, 2026

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தாய்லாந்து அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22.11.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளினதும் அமைச்சரவைகள் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.