• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை!

Feb 8, 2022

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்தவர் 41 வயதான கிஷோர்குமார் ராகவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கிஷோர்குமார் ராகவன் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடம் இருந்து 36.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி, ஒருவர் 15 கிராமுக்கு மேல் ஹெரோயின் கடத்தினால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.

இதனையடுத்து கிஷோர்குமார் உள்ளிட்ட இருவரைகாவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கிஷோர்குமார் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது கட்சிகாரருக்கு அவர் எடுத்து சென்றது ஹெரோயின் என்பது தெரியாது என வாதிட்டார். எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, கிஷோர்குமார் ராகவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் மற்றொரு குற்றவாளி பொலிஸாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், அவருக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed