வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. அதேபோல் வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வெந்தயம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மசாலா மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.எனவே அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.

வெந்தயத்தின் பல நன்மைகள் :

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வெந்தயம் பல நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும்.

வெந்தயம் நமது செரிமானத்தை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்ல, இது மலச்சிக்கலுக்கும் சிகிச்சையளிக்கிறது. இது தவிர, வெந்தயத்தை உட்கொள்வது இதய நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி உள்ள பெண்களுக்கு வெந்தயம் எடுத்துக்கொண்டால் வலிகுறைந்து நன்மை தரும்.

 நீரிழிவு நோய் வரமால் தடுக்க :

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

இன்சுலின் சுரப்பைக் கூட்ட இது ஒண்ணு போதும் வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சரியான அளவில் கொண்டு வருகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதே நீரிழிவு கூடுவதற்கு காரணம். வெந்தயத்தைச் சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

வெந்தயம் உட்கொள்ள சிறந்த வழி ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.  

Von Admin