• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழர்!

Feb 19, 2022

கனடா – மார்கம் நகரில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய  காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 56 வயதான தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  காவல் துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

16வது அவென்யூ மற்றும் மிங்கே அவென்யூ சந்திப்பில் வைத்து சாம்பல் நிற கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியுள்ளதாக  காவல் துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு  காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, 1-866-876-5423 அல்லது 7704 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என  காவல் துறையினர் கூறியுள்ளனர்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed