அனைத்து பிரிவுகளுக்கும் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூன்று மணி நேர மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தேவைப்படும் பட்சத்தில், இரவு வேளையில் 30 நிமிடம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம் பொது மக்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் பாவனையினை முடிந்தவரை குறைந்தளவில் பயன்படுத்துமாறும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.