யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆலயத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 9 பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதுடன், பெண் பொலிஸாரை பயன்படுத்தி சோதனை செய்தபோது அந்தரங்க உறுப்புக்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சில நகைகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.