• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல மந்திரம்

Mrz 1, 2022

ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை நினைத்து பக்தர்கள் எதற்காக இந்த கோஷத்தை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள்.

இந்த மந்திரத்தை சொல்லி சத்தமிட்டுக் கொண்டு சிவபெருமானே வழிபாடு செய்தால் என்னதான் நடக்கும்? என்ற சந்தேகத்திற்கு விடையைத் தெரிந்து கொள்ள நீண்ட நாட்களாக தவத்தை மேற்கொண்டு, சிவபெருமானை தரிசனம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றார் முனிவர். கைலாயத்தில் சிவபெருமானை சந்தித்த முனிவர், தனக்குள் இருந்த கேள்வியை எழுப்பினார். ‘எம்பெருமானே! எதற்காக உங்களை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்கள் இந்த மந்திரத்தை கோஷமிட்டுக் கொண்டு திரிகிறார்கள். அப்படி அந்த ஒருவரை மந்திரத்தில் என்ன அற்புதம் தான் அடங்கியிருக்கிறது.’ –

எம்பெருமான் அந்த முனிவரை தன்னுடைய அருகில் அழைத்தார். காட்டில் ஊர்ந்து செல்லும் ஒரு புழுவைப் பார்த்து, அந்த புழுவின் காதில் போய் ‘சிவசம்போ’ என்ற வார்த்தையை முனிவரின் வாயால் சொல்ல சொல்கின்றார். முனிவரும் அந்த புழுவின் காதில் போய் சிவசம்போ! என்று சொல்ல, அந்தப் பொருள் இறந்து விட்டது. அதன்பின்பு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் காதில் போய் ‘சிவசம்போ’ என்று முனிவரை  சொல்ல சொன்னார். அந்த பட்டாம்பூச்சியும் இறந்துவிட்டது. அடுத்து காட்டில் துள்ளி குதித்து விளையாடும் மானின் காதில் போய் ‘சிவசம்போ’ என்ற வார்த்தையை சொல்ல சொன்னார். அந்த மான் உடனடியாக இருந்துவிட்டது. முனிவருடைய மனதிற்குள் ஒரே பயம். என்னடா இது. இந்த மந்திரத்திற்கு இப்படி ஒரு சக்தியா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் செத்துப் போய்ருவாங்களா? இந்த மந்திரத்தையா மனிதர்கள் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்ற குழப்பம் பயம் எல்லாம் அந்த முனிவருக்கு வந்துவிட்டது. –

இறுதியாக ஒரு தாய் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு, சிவபெருமானிடம் ஆசீர்வாதம் வாங்க வருகின்றார். அந்த குழந்தையின் காதல் போய் ‘சிவசம்போ’ என்ற மந்திரத்தை சொல் என்றவாறு முனிவரைப் பார்த்து சிவபெருமான் சொல்கின்றார். முனிவருக்கு மனதிற்குள் பயம் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் போய் இந்த மந்திரத்தை நான் உச்சரிக்கவே மாட்டேன். அந்த குழந்தையை சாகடிக்க எனக்கு மனது இல்லை, என்று மந்திரத்தைச் சொல்ல மறுக்கின்றார். ஆனால் எம்பெருமான் விடவில்லை. என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம். இந்த மந்திரத்தை அந்த குழந்தையின் காதில் போய் சொல் என்று ஆணையிடுகிறார். சரி, சிவபெருமானின் வாக்கை நாம் தட்டக் கூடாது, என்று முனிவரும் இந்த சிவசம்போ! என்ற மந்திரத்தை அந்த குழந்தையின் காதில் போய் சொன்ன உடனேயே அந்த குழந்தை எழுந்து அமர்ந்து சிவபெருமானை வணங்கியது. புழுவாய் இருந்த நான், ஒரே ஒரு மந்திரத்தால் பட்டாம் பூச்சியாக மாறினேன். அடுத்து ஒரு வரி மந்திரத்தால் மானாக மாறினேன். அடுத்து ஒருவரி மந்திரத்தால் மனித பிறவியை எடுத்து இருக்கின்றேன். இன்னும் ஒரே முறை ‘சிவசம்போ’ என்ற வார்த்தையை உச்சரியுங்கள். நான் தெய்வீக நிலையை அடைந்து விடுவேன் என்று கூறியதாம். இதைப்பார்த்த முனிவருக்கு எல்லா விசயமும் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததா. இன்று நீங்கள் விரதம் இருந்து இருந்தாலும் சரி, விரதம் இல்லை என்றாலும் சரி, கண்டு விழித்தாலும் சரி, கண் விழிக்க வில்லை என்றாலும் சரி, சிவபெருமானுக்கு வில்வ இலைகளைக் கொண்டு, உங்களுடைய கைகளால் அர்ச்சனை செய்து, ‘சம்போ சிவ சம்போ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கான பிறவிப் பலனை அடைவீர்கள் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ‘ஓம் நமசிவாய’.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed