• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் விபத்தில் இருவருக்கு நேர்ந்த நிலை

Mrz 19, 2022

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உழவு இயந்திரமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவமானது கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆலயத்திற்கு சென்று, திரும்பி யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரம் ஏ9 வீதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டவேளை கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய நிலையில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed