வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்த ஆலயத் தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆலயச் சூழல் வண்ண மின்விளக்குகளால் ஒளிர்ந்து மிகவும் அழகுறக் காட்சி தருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin