• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்கச் சங்கிலி திருட்டு! 

Mrz 22, 2022

பிரசித்திபெற்ற யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்படி ஆலயம் சென்ற வயோதிபத் தாய் ஒருவரின் ஒன்றே முக்கால் பவுண் தங்கச் சங்கிலி நாசூக்கான முறையில் திருட்டுப் போயுள்ளது.

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(21.3.2022) முற்பகல்-11.30 மணிக்கும் நண்பகல்-12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது.

குறித்த வயோதிபத் தாய் தனது மகனுடன் ஆலயத்திற்குச் சென்ற நிலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது கழுத்தில் அணிந்திருந்த
அவரது தங்கச் சங்கிலி திடீரெனக் காணாமல் போயுள்ளது. தங்கச் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்த பின்னர் மேற்படி வயோதிபத் தாய் நிலத்தில் விழுந்து அழுது புலம்பிய காட்சி ஆலயத்தில் நின்றவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

பருத்தித்துறை நாவலடியைச் சேர்ந்த 65 வயதான வயோதிபத் தாய் ஒருவரின் தங்கச் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஆலயச் சூழலில் கடமையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துப் பொலிஸாரும், பொலிஸ் புலனாய்வாளர்களும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed