வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று குறித்த குடும்பஸதர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

இச்சம்பவமானது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு, மயில்லோடை இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.