பிரபலமான கூகிள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகிள் நிறுவனத்தின் செயலிகள் முக்கியமானவையாக உள்ளன.

கூகிளின் மேப்ஸ், ப்ரவுசர், போட்டோஸ், டிரைவ் உள்ளிட்ட பல செயலிகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகிள் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து அவர்கள் அனுமதி இன்றியே தரவுகளை கூகிள் செயலிகள் சேமிப்பதாக அமெரிக்காவின் ட்ரிணிட்டி பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பேஸ்புக் தனிநபர் தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin