• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொடியேறும் குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள்.

Apr 6, 2022

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் வியாழக்கிழமை(07.4.2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்தமாதம்-12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவமும், 13 ஆம் திகதி புதன்கிழமை வேட்டைத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 16 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed