• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடக்கில் வெள்ளிவரை தொடரும் மழை !

Apr 12, 2022

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் தீவு உட்பட்ட மேற்கு கரையோரப் பகுதிகள் ஏனைய பகுதிகளை விட சற்று கூடுதலான அளவு மழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்  இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது நன்மை பயக்கும் என மேலும் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed