லண்டனில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனொருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் ஹேய்ஸ் பகுதியில் கடந்த 2020 அக்டோபர் மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி நான்கு வயதான அகர்வின் சசிகரன் என்ற சிறுவன் உயிரிழந்திருந்தார்.

சிறுவன் சாலையை தனியாக கடக்க முயன்ற சந்தர்ப்பம் கார் ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளதுடன்,சிறுவனை காப்பாற்ற எடுத்த முயற்சியில் தாயினது விரல் உடைந்துள்ளது.

இந்நிலையில்,குறித்த விபத்தை வாகன சாரதியால் தவிர்த்திருக்கலாம் எனவும், சாரதி மீது குற்றமில்லை என்றும்  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று நடந்தவற்றை அகல்யா சசிகரனும் பொலிஸாருக்கு விளக்கியுள்ளதுடன், மகனை காப்பாற்ற அகல்யா முயன்றதில் விரல் உடைந்ததும், நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவன் அகர்வின் மரணத்தின் பின்னர் லண்டனில் இருந்து வெளியேறி, வேறு பகுதியில் குடியேற முடிவு செய்துள்ளதாகவும் அகல்யா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Von Admin