யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (17-05-2022) மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் தலையில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Von Admin