குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது பவுசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் பவுசர் மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மழையுடனான காலநிலை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin