ஒரு வயதுடைய குழந்தையொன்று கதிரையில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிந்ததாக தெரிவந்துள்ளது. 

Von Admin