• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

17 ஆண்டுகளுக்கு முன் யூடியூபில் பதிவேற்றப்பட்ட முதல் காணொளி.

Jun 13, 2022

யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஒரு அமெரிக்க நாட்டு நிகழ்நிலை காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாகும், 

இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005-இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளி பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேர காணொளிகளைப் பார்க்கிறார்கள்.

இந்நிலையில் இந்த யூடியூப்செயலியில் ஒரு நாளில் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கையானது லட்சக்கணக்கில் உள்ளது. 

அந்த வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோவை, அந்நிறுவனம் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பற்றி இங்கு காணலாம். அதாவது இந்நிறுவனம் தொடங்கப்பட்ட, சுமார் 17-ஆண்டுகளுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோவானது தற்போது பகிர்ந்துள்ளது.

மேலும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் வைத்து, யூடியூப்பின் இணை நிறுவனரான ஜாவத் கரீம் என்பவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார். 

அதன் பின், அதனை முதல் வீடியோவாகவும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, இதுவரை அந்த வீடியோவை 235- மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed