கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய வர்த்தக பெண் ஆவார். குறித்த பெண் இன்று (25) காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை

இதன்போது சுமார் 650 கிராம் எடையுள்ள கழுத்தணிகள், மோதிரங்கள் மற்றும் மோதிரங்களை அணிந்து கொண்டு நாட்டிற்கு வந்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன

Von Admin