ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெப்பம் தீவிரமடையும் நிலையில், இங்கிலாந்தில் முதன் முறையாக அதீத வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை தாண்டும் என்பதுடன், தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்சில் திங்கள் முதல் செவ்வாய் வரை கடுமையான வெப்பம் நிலவும் என பிரித்தானிய வானிலை அவதான மையம் கூறியுள்ளது.

உதவி சேவைக்கான அழைப்பை கையாள்வதற்கென மேலதிகமானவர்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாதிக்கப்படக் கூடிய உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறும் பிரித்தானிய சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அவரச நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவில் அதீத வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, வெப்பநிலையானது 41 பாகை செல்சியஸ் வரை உயர்வடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளையும் நாளை மறுதினமும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய அனைத்தைப் பயணங்களையும் தவிர்க்குமாறு லண்டனுக்கான போக்குவரத்து நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Von Admin